காதலர் தினத்தை கொண்டாட தடை போட்ட நாடுகள்!

0
89

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலக நாடுகள் காதலர் தினத்தை வரவேற்க தயாராக இருந்தாலும், சில நாடுகளில் காதலர் தினத்தை கொண்டாட தடை விதித்துள்ளது.

மேற்கத்திய கலாச்சாரத்தை எதிர்ப்பதாலும் தங்கள் மதத்தின் கொள்கைகளுக்கு எதிரானதாக கருதப்படுவதாலும் காதலர் தினத்திற்கு அந்த நாடுகள் தடைவித்துள்ளன.

காதலர் தினத்திற்கு தடைபோட்ட நாடுகள்

ஈரான்:

ஈரான் நாட்டில் காதலர் தினம் தொடர்பான எந்தவித கொண்டாட்டங்களும் நடவடிக்கைகளும் நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்திற்கு பதிலாக மெஹ்ரெகன் என்ற வழக்கத்தை ஈரான் நாட்டு மக்கள் கடைத்து வருகின்றனர்.

இத்தினம் அன்பு, நட்பு மற்றும் ஒற்றுமையை போற்றும் ஒரு முறை மற்றும் இஸ்லாம் அறிமுகப்படுத்தபடுவதற்கு முன்பிருந்தே அனுசரிக்கப்பட்டு வருகிறது.

காதலர் தினத்தை கொண்டாட தடைபோட்ட நாடுகள்! | Countries Banned From Celebrating Valentine S Day

மலேசியா:

கடந்த 2005 முதல் இஸ்லாமிய தலைவர்கள் இந்நாட்டில் காதலர் தினத்தைக் கொண்டாட தடை போட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இளைஞர்கள் தவறான பாதையில் இட்டுச்செல்லும் ஒரு கருவியாக இருக்கிறது என்று பரவலாக நம்பப்படுவதால் காதலர் தினத்திற்கு இங்கு தடை உள்ளது.

தடையை மீறி காதலர் தினத்தைக் கொண்டாடுபவர்கள் ஒழுக்க காவலர்களால் கைது செய்யப்படுகிறார்கள்.

காதலர் தினத்தை கொண்டாட தடைபோட்ட நாடுகள்! | Countries Banned From Celebrating Valentine S Day

பாகிஸ்தான்:

உலகின் இரண்டாவது அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்டுள்ள நாடு பாகிஸ்தான். இங்கும் காதலர் தினம் என்பது தங்கள் மதத்தின் கொள்கைகளுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது.

இளைஞர்கள் வேலண்ட்டைன்ஸ் டே கொண்டாட முனைப்பாக இருந்தாலும் அங்கு பரவலாக இதற்கு தடை போடப்பட்டுள்ளது.

காதலர் தினத்தை கொண்டாட தடைபோட்ட நாடுகள்! | Countries Banned From Celebrating Valentine S Day

  இந்தோனேசியா:

இங்கு அதிகாரப்பூர்வமாக காதலர் தினத்தைக் கொண்டாட தடை இல்லையென்றாலும், குறிப்பிட்ட இடங்களில் வசிக்கும் மக்கள் காதலர் தினத்தைக் கொண்டாட்டத்தை எதிர்க்கின்றனர்.

காதலர் தினத்தை கொண்டாட தடைபோட்ட நாடுகள்! | Countries Banned From Celebrating Valentine S Day

உஸ்பெகிஸ்தான்:

இங்கு 2012ஆம் ஆண்டு வரை காதலர் தினம் மிகப் பரவலாக கொண்டாடப்பட்டு தான் வந்தது. ஆனால் அதன் பிறகு கல்வி அமைச்சின் அறிவொளி மற்றும் மதிப்புகளை மேம்படுத்துதல் துறை காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

காதலர் தினத்திற்கு பதிலாக இங்கும் மக்கள் முகலாய பேரரசர் பாபரின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.

காதலர் தினத்தை கொண்டாட தடைபோட்ட நாடுகள்! | Countries Banned From Celebrating Valentine S Day

சவுதி அரேபியா:

பல மேற்கத்திய நாட்டு மக்கள் இங்கு குடிபெயர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும் தங்கள் நாட்டின் கலாச்சாரத்திற்கு ஒத்துப்போகாத எந்த வழக்கங்களையும் அவர்கள் கடைப்பிடிப்பதில்லை.

அதோடு சவுதி அரேபியாவில் ஒரு தம்பதி பொது வெளியில் தங்களுக்குள் இருக்கும் அன்பை அன்னியோனியத்தை வெளிக்காட்டுவதும் குற்றமாக கருதப்படுகிறது.

காதலர் தினத்தை கொண்டாட தடைபோட்ட நாடுகள்! | Countries Banned From Celebrating Valentine S Day

காதலர் தினத்தைக் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் அத்தினத்தில் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும். பொது இடங்கள், அலுவலகங்கள், பூங்காக்கள், கடைகள் என அனைத்து இடங்களிலும் காவலர்கள் மக்களின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவார்கள்.

அரசின் தடையை மீறி யாரேனும் காதலர் தினத்தை கொண்டாடுவது கண்டறியப்பட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் எனவும் அந்த நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.