சீனாவில் பானத்திற்கு பதில் சோப்பை கொடுத்த உணவகம்!

0
317

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்தில் கடந்த ஜூன் 16ஆம் திகதி வூகாங் என்ற பெண்மணி அவரின் உறவினர்கள், நண்பர்கள் என 7 பேருடன் சேர்ந்து உணவருந்தியுள்ளார்.

உணவகத்தில் அவர்கள் ஜூஸ் ஆர்டர் செய்துள்ளனர் தொடர்ந்து அந்த உணவகத்தின் பணியாளர் அவர்களுக்கு பாட்டிலில் ஒரு ஜூஸை கொண்டு வந்துள்ளார்.

அனைவரும் அதை குடித்த ஓரளவுக்கு குடித்த பின் அவர்களுக்கு ஏதோ அசௌகரியம் ஏற்படுவதை உணர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பானத்திற்கு பதில் சோப்பை கொடுத்த உணவகம் | Restaurant That Gave Soap In Exchange For A Drink

தொடர்ந்து அந்த 7 பேருக்கும் வயிற்றில் எந்த உணவு பொருள்களுக்கும் இல்லாத அளவிற்கு முழுவதுமாக சுத்தப்படும் முறையை மேற்கொண்டு அவர்களுக்கு உடல்நிலையை மருத்துவர்கள் சீராக்கியுள்ளனர்.

இதை வூகாங் என்ர பெண்மணி வீடியோவாக சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.

இருப்பினும், இந்த தகவல் உள்ளூர் ஊடகங்களின் வழியாக வெளிச்சத்திற்கு வர தொடங்கியது. அதில், பார்வை கோளாறு உள்ள பணியாளர் பாட்டிலில் கொண்டு வந்த பானம் தான் பிரச்னை என்றும் அது ஜூஸ் இல்லை என்றும் தெரியவந்தது.

அந்த பணியாளருக்கு பார்வையில் குறைபாடு உள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் ஜூஸ் கலவைக்கு பதில் தரையை சுத்தம் செய்யும் சோப்பு பொடியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

அந்த பணியாளர் அந்த உணவகத்தில் வேலை செய்பவர் இல்லை என்றும் அவ்வப்போது வந்து உதவி செய்வார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் அவர் எந்த வகை சோப்பு பொடியை அவரின் வாடிக்கையாளருக்கு கலந்து கொடுத்தார் என்பது இன்னும் தெரியவரவில்லை.

ஏனென்றால் சீனாவில் பல தரையை சுத்தம் செய்ய பயன்படும் சோப்பு பொடிகள் ஆரஞ்சு ஜூஸ் பொடி போன்று தான் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதாக கூறப்படுகிறது.

அத்தோடு அந்த சோப்பு பொடி கவரில் வெளிநாட்டு மொழியில் எழுதியதிருப்பதால் மக்களால் அதை எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதை குடித்தவுடன் தொண்டையில் பிரச்னை ஏற்படுவதை அவர்கள் உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.