அனைத்து பெண்களுக்கும் தேவையான நம்பிக்கை நீங்கள்! சானியா மிர்சாவுக்கு கணவரின் கணவரின் வார்த்தைகள்

0
284

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சாதித்த அனைத்திற்கும் உங்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன் என சானியா மிர்சாவுக்கு அவரது கணவர் சோயிப் மாலிக் ஆறுதல் கூறினார்.

கிராண்ட்ஸ்லாம் பயணம்

அவுஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாடிய சானியா மிர்சா தோல்வியுற்றார்.

அதன் பின்னர் ஊடகத்திடம் பேசும்போது சானியா மிர்சா கிராண்ட்ஸ்லாம் பயணம் முடிவுக்கு வந்ததால் கண்ணீர் விட்டு அழுதார். எனினும் அவர் இன்னும் சில போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார்.

சோயிப் மாலிக்கின் ஆறுதல்

இந்த நிலையில் கிராண்ட்ஸ்லாம் பயணத்தை முடித்துக் கொண்ட சானியா மிர்சாவுக்கு ஆறுதல் கூறும் வகையில் பதிவிட்டுள்ளார். அவரது ட்வீட்டில்,

மாலிக்/சானியா - Malik/Sania

‘விளையாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் நீங்கள் மிகவும் தேவையான நம்பிக்கை. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சாதித்த அனைத்திற்கும் உங்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன். நீங்கள் பலருக்கு உத்வேகமாக இருக்கிறீர்கள், தொடர்ந்து முன்னேறுங்கள். நம்பமுடியாத உங்கள் டென்னிஸ் வாழ்க்கைக்கு எனது வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.