ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மூத்த தலைவரை சுட்டுக் கொன்ற அமெரிக்க ராணுவம்!

0
309

சோமாலியாவில் அமெரிக்க துருப்புக்கள் நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மூத்த தலைவர் பிலால் அல் சுடானி கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சோமாலியாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) உத்தரவின் பேரில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய பிராந்திய தலைவர் பிலால் அல்-சுடானி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு சோமாலியாவில் உள்ள மலை குகையில் அமெரிக்க துருப்புக்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி சுடானியைக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது சூடானின் ஐஎஸ்ஐஎஸ் குழுவைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க துருப்புக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.