62 வயதில் வெளிநாட்டு பெண்ணை மணந்த தமிழர்! கொந்தளித்த உறவினர்கள்… நள்ளிரவில் அதிர்ச்சி

0
104

தமிழகத்தை சேர்ந்த 62 வயதான நபர் வெளிநாட்டு பெண்ணை காதல் திருமணம் செய்ததை ஏற்காத உறவினர்கள் ஆத்திரத்தில் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

62 வயது நபருக்கும் இளம்பெண்ணுக்கும் நடந்த திருமணம்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (62) திருமணம் ஆகாமல் இருந்த இவர் கிறஸ்தவ மத போதனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பேஸ்புக் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த திபோரா என்ற இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்கினர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 21-ம் திகதி திபோராவை நாகர்கோவில் அழைத்து வந்த கிறிஸ்டோபர், தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

வயது கடந்த இந்த திருமணத்திற்கு சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு கிறிஸ்டோபர் உணவு வாங்க வெளியே சென்ற சமயத்தில் உறவினர்கள் திபோரா-வை வீட்டின் அறையில் பூட்டி சிறை வைத்து அதிர்ச்சியளித்தனர்.

உறவினர்கள் ஆத்திரம்

வீடு திரும்பிய கிறிஸ்டோபரையும் உள்ளே விடாமல் கேட்டையும் இழுத்து மூடியுள்ளனர். இது குறித்து அவர் அளித்த புகாரில் பொலிசார் வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர்கள் திபோரா-வை வீட்டைவிட்டு வெளியே விட மறுத்ததுடன், கிறிஸ்டோபரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து பொலிசாருடன் நள்ளிரவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொலிசார் எச்சரிக்கையை அடுத்து வீட்டை திறந்தனர்.

62 வயதில் வெளிநாட்டு பெண்ணை மணந்த தமிழர்! கொந்தளித்த உறவினர்கள்... நள்ளிரவில் அதிர்ச்சி | Indonesia Girl Marries Tamilnadu Relatives

கிறிஸ்டோபர் திருமணம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என உறவினர்கள் தெரிவித்தனர். கிறிஸ்டோபர் கூறுகையில், நான் இனி திருமணம் செய்துகொள்ளமாட்டேன், எனது வீடு மற்றும் சொத்துக்களை பங்கிட்டுக்கொள்ளலாம் என உறவினர்கள் நினைத்தார்கள். சொத்து கிடைக்காது என்பதால் தனது திருமணத்தை உறவினர்கள் எதிர்க்கிறார்கள் என்றார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக தெரியவந்துள்ளது.