கீரிப்பிள்ளை கடித்ததால் உயிரிழந்த வர்த்தகர்!

0
101

கீரி கடித்ததில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் சிலாபத்தில் இடம் பெற்றதாகவும் அவருடைய வீட்டிற்குள் புகுந்து கீரி கடித்ததாகவும் தெரிய வந்துள்ளது.

குறித்த நபரின் வீட்டிற்குள் புகுந்த கீரி ஒன்றை விரட்ட முற்பட்ட போது ​​குறித்த கீரி அவரது கால் விரலை கடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீரிப்பிள்ளையால் உயிரிழந்த வர்த்தகர் | Trader Killed In Keri Bite

குறித்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 39 வயதுடைய மாவில, நாத்தாண்டிய பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.