இலங்கையில் தமிழர் தாயகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி இடம்பெறவுள்ள மாபெரும் எழுச்சி பேரணி!

0
91

இலங்கையில் தமிழர் பகுதியில் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதியை கரிநாளாக பிரகடனபடுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது.

இலங்கையில் தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ள மாபெரும் எழுச்சி பேரணி! | A Great Protest To Be Held In The Tamil Homeland

இந்த நிலையில் அண்மையில் யாழில் சிவில் அமைப்புக்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து நேற்றைய தினம் (27-01-2023) மன்னார் மற்றும் வவுனியாவில் உள்ள மதகுருமார், சிவில் அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலதரப்பினரை சந்தித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடினர்.

இலங்கையில் தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ள மாபெரும் எழுச்சி பேரணி! | A Great Protest To Be Held In The Tamil Homeland

அவர்கள் தமது போராட்டத்திற்கான அழைப்புக்களை கோரிய நிலையில் வவுனியா மாவட்ட சிவில் அமைப்புக்கள் மதகுருமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவுகளை தெரிவித்துள்ளனர்.  

மேலும், தொடர்ச்சியாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மாணவர் ஒன்றியத்தினரால் போராட்டம் தொடர்பான ஆதரவு கோரிய கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.  

இலங்கையில் தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ள மாபெரும் எழுச்சி பேரணி! | A Great Protest To Be Held In The Tamil Homeland