மனைவி வெளிநாடு செல்வதனை தடுக்க மகனுக்கு விஷம் கொடுத்த தந்தை

0
272

பொலன்னறுவையில் மனைவி வெளிநாடு செல்வதனை தடுப்பதற்காக 12 வயது மகனுக்கு விஷம் கொடுத்த தந்தை ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை உள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த 48 வயதுடைய தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது 12 வயது மகனுக்கு விஷம் கொடுத்ததையடுத்து, மகன் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தந்தைக்கும், தாய்க்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

நேற்று மாலை மகன் தனது தந்தையின் வீட்டிற்குச் சென்றபோது, ​​மகனுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதுடன், மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக மகனுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் மகனுக்கு தந்தை விஷம் கொடுத்த செய்தி அறிந்த தாய் தந்தை வாழ்ந்த வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர், விஷம் அருந்திய மகனை வைத்தியசாலையில் சேர்க்க தாய் நடவடிக்கை எடுத்துள்ளார். மகனிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் போது, ​​தாய் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் தந்தை விஷம் குடிக்குமாறு மகனுக்கு அழுத்தம் கொடுத்ததாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.