யாழ். காரைநகரில் அரச பேருந்து மீது தாக்குதல் (Video)

0
236

யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – நீலங்காடு பகுதியில் அரச பேருந்து மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் (24.01.2023) பதிவாகியுள்ளது.

காரைநகரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தினை மறித்தே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

video source from Lankasri

சாரதி மற்றும் நடத்துநர் மீதும் தாக்குதல்

இதன்போது பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.