யாழில் பதைபதைக்கும் சம்பவம்: குடும்பஸ்தர் வெட்டிக் கொலை!

0
226

யாழ்.கோப்பாய் மத்தியில் குடும்பஸ்தர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் (கராஜ்) நடத்தும் உரிமையாளரான ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பவரே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழில் பதைபதைக்கும் சம்பவம்: குடும்பஸ்தர் வெட்டிக் கொலை | A Family Member Was Hacked To Death In Jaffna

இச்சம்பவம் நேற்றிரவு (21-01-2023) 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மூவரே குடும்பத்தலைவரை துரத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்து தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.