உறைபனியிலும் கடமை தவறாத உக்ரைன் வீரர்கள்; வைரலாகும் புகைப்படங்கள்!

0
217

உறைபனியிலும் உக்ரைன் வீரர்கள் காவல் பணியில் ஈடுபாடுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

உறைபனியிலும் கடமை தவறாத உக்ரைன் வீரர்கள்; வைரலாகும் புகைப்படங்கள் | Ukrainian Soldiers Who Did Not Fail In The Cold

உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா உதவி செய்து வருகிறது. இதனால் உக்ரைன் ராணுவம், ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீண்டும் மீட்டு வருகிறது.

மேலும் அமெரிக்கா அளித்த நவீன டிரோன்கள் உதவியுடன் அவர்கள் மீண்டும் தீவிர போரில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் ரஷிய அதிபர் புடின் “உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்” என்று கூறியுள்ளார்.

ஆனால் உக்ரைன் ராணுவமோ தங்கள் வீரர்கள் உறைபனியிலும் காவல் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளது.

இது தொடர்பாக உறைபனியில் படுத்தபடி உக்ரைன் ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளுடன் இருக்கும் காட்சிகளை இணையத்தில் வெளியிட்டுள்ளது.