3000 ஊழியர்களை காலையில் அலுவலகத்திற்கு வரவலைத்து அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்!

0
298

காலையிலேயே அலுவலகத்திற்கு வரவலைத்து 3000 ஊழியர்களை அமெரிக்க நிறுவனம் ஒன்று பணிநீக்கம் செய்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், 2023-ல் ஒரு நாளைக்கு 1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

3000 ஊழியர்களை காலையில் அலுவலகத்திற்கு வரவலைத்து அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்! | Us Company Lays Off 3000 Employees

இந்த நிலையில், CEO உடன் ஆலோசனை கூட்டம் எனக்கூறி காலை 7.30 மணிக்கு அலுவலகத்தின் கான்பரன்ஸ் அறைக்கு வரவழைத்து, 3000 ஊழியர்களை அமெரிக்க நிறுவனம் ஒன்று பணி நீக்கம் செய்துள்ளது.

எங்களை மன்னித்துவிடுங்கள், வேறு வழியில்லை, உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் எனக்கூறி மேலாளர்கள் வருத்தத்துடன் ஊழியர்களை வலுக்கட்டாயமாக பணிநீக்கம் செய்துள்ளது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3000 ஊழியர்களை காலையில் அலுவலகத்திற்கு வரவலைத்து அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்! | Us Company Lays Off 3000 Employees

மேலும், அதிக வட்டி விகிதங்கள், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றங்கள், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக உலகளாவிய சில தனியார் வங்கிகள் சமீபத்திய மாதங்களில் தங்கள் பணியாளர்களைக் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.