கனடா விதித்துள்ள தடை.. நெருங்கிய ஒருவரிடம் மகிந்த கூறிய விடயம்!

0
45

ஜனவரி மாதம் கனடாவில் தமிழ் பாரம்பரியத்தைக் குறிப்பது என்ற கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கையெழுத்திட்ட செய்தியை மட்டுமன்றி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஸ்டாவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு தடைகளை விதிக்கும் அறிவிப்பை அவரது அரசாங்கம் கடந்த வாரம் வெளியிட்டிருந்த நிலையில் தமக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் இல்லையென மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாக சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கும் ஏற்கனவே அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தான் குறிப்பிடப்பட்டிருக்கும் விதம் தொடர்பாக கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

உள்நாட்டில் கூட அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை அல்லது எந்தவொரு நீதித்துறை அமைப்பும் எந்த குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை, குற்றவாளியெனக் கண்டறியப்படுவதை விட்டு விடுங்கள் என்று அவர் நெருங்கிய நம்பிக்கைக்கு உரிய ஒருவரிடம் கூறியுள்ளார்.