நித்தியானந்தாவின் கைலாசாவை தனி நாடாக அங்கீகரித்த அமெரிக்க நகரம்..

0
336

கைலாசாவை நாடாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைலாசா

சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்தியானந்தா, கைலாசா எனும் புதிய நாட்டை வாங்கிவிட்டதாகவும், இந்துக்களின் புனித பூமியாக அது இருக்கும் என்றும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அவர் கூறிய கைலாசா எங்கு இருக்கிறது என்ற மர்மம் நீடித்து வந்தது. பலரும் அதனை தேடி வந்தனர். இதற்கிடையில் தனி நாடு கோரி நித்தியானந்தா ஐ.நா சபையிடம் விண்ணப்பித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

நாடாக அங்கீகரித்த அமெரிக்கா

இந்த நிலையில் அமெரிக்காவின் நெவார்க் நகரம் கைலாசாவை தனி நாடாக அங்கீகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கைலாசாவை இறையாண்மைப் பெற்ற நாடாக அங்கீகரித்துள்ள நெவார்க், இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

நித்தியானந்தாவின் கைலாசா இனி தனி நாடு! அங்கீகரித்த அமெரிக்க நகரம் | Nithyanandas Kailasa Recognized As Country By Us

இந்த ஒப்பந்தத்தின்படி தொற்றுநோய், சிக்கலான மனநலப் பிரச்சனைகள், வன்முறை, வறுமை, கல்வியறிவின்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கு இரு நகரங்களும் சேர்ந்து தீர்வு காணும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நாவுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்ரியா, நெவார்க் நகர மேயர் பராக்கா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.