ஆடைகள் களைந்து நாய் போல… இளம் பெண்ணிற்கு விமான நிறுவனத்தால் ஏற்பட்ட பகீர் அனுபவம்

0
57

ஸ்பெயின் நாட்டில் விமான பணிப்பெண் வேலைக்காக விண்ணப்பித்திருந்த பெண் ஒருவரை ஆடைகள் களைந்து நாய் போன்று நடத்தப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

விமான பணிப்பெண்களாக

குவைத் ஏர்வேஸ் நிறுவனத்திற்காகவே தொடர்புடைய நேர்முகத்தேர்வு நடந்துள்ளது. மாட்ரிட் விமான நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள Melia Barajas ஹொட்டலில் இச்சம்பவம் நடந்துள்ளது.

ஆனால், இதுவொன்றும் புதிதல்ல எனவும், விமான பணிப்பெண்களாக தெரிவாகும் சிலரது பற்கள் வரிசை கூட பரிசோதிக்கப்படும் எனவும் உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

23 வயதான Mariana என்பவர் தெரிவிக்கையில், சம்பவத்தின் போது பெண் ஒருவர் தம்மை ஆடைகளை களைய சொன்னதாகவும், பின்னர் அவர் குறிப்பெடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆடைகள் களைந்து நாய் போல... இளம் பெண்ணிற்கு விமான நிறுவனத்தால் ஏற்பட்ட பகீர் அனுபவம் | Airline Forced Women Strip Recruitment Nightmare

உயிரியல் பூங்காவில் விலங்குகள் போல

அந்த நிமிடங்களில் உயிரியல் பூங்காவில் விலங்குகள் போல தம்மை நடத்தப்பட்டது போன்று உணர்ந்ததாக Mariana கண்கலங்கியுள்ளார். தம்முடன் தேர்வுக்கு கலந்துகொண்டவர்களில், அதிக உடல் எடை கொண்டவர்கள், மச்சங்கள் அல்லது காணக்கூடிய வடுக்கள் இருந்தவர்கள் உடனடியாக நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏழு மொழிகள் பேசும் ஒரு இளம்பெண்ணின் புருவத்தில் சிறிய தழும்பு இருந்ததால் அவள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாள் எனவும், மொழிப்புலமை குறித்து தாங்கள் கவலைப்படுவதில்லை எனவும் அந்த விமான நிறுவன நிர்வாகி தெரிவித்துள்ளதாக Mariana கூறியுள்ளார்.

ஆடைகள் களைந்து நாய் போல... இளம் பெண்ணிற்கு விமான நிறுவனத்தால் ஏற்பட்ட பகீர் அனுபவம் | Airline Forced Women Strip Recruitment Nightmare

மட்டுமின்றி, நேர்முகத்தேர்வு முடித்து அறையை விட்டு வெளியேவரும் பல பெண்களும் கண்கலங்கியபடி வெளியேறுவதை காண முடிந்தது என்கிறார்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் குவைத் ஏர்வேஸ் நிற்வாகம் அல்லது, ஸ்பெயினில் உள்ள Meccti நிறுவனம் என இரண்டும் விளக்கமளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.