தன்னை வன்புணர்வு செய்த இளைஞரின் தாயை துப்பாக்கியால் சுட்ட சிறுமி!

0
83

இந்திய தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி, தன்னை வன்புணர்வு செய்த இளைஞரின் தாயை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

16 வயது சிறுமியின் கொலை முயற்சி

டெல்லி பஜன்பூரா சுபாஷ் மொகலா பகுதியைச் சேர்ந்தவர் குர்ஷிதா(50). அவர் நடத்தி வரும் மளிகை கடைக்கு வந்த 16 வயது சிறுமி, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் குர்ஷிதாவை சுட்டுள்ளார்.

இதில் கூச்சலிட்ட நிலையில் குர்ஷிதா மயங்கி விழுந்தார். உடனே அச்சிறுமி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சுடப்பட்ட குர்ஷிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சிறிது நேரத்திலேயே குறித்த சிறுமியை கைது செய்தனர்.

துப்பாக்கி பறிமுதல்

அவரிடம் விசாரணை நடத்தியபோது, 2021ஆம் ஆண்டு மளிகை கடை நடத்தி வந்த குர்ஷிதாவின் 25 வயது மகன் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறினார்.

அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்த பொலிஸார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். சிறுமி கொடுத்த புகாரின் பேரில் அப்போதே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.