குஜராத்தில் கேபிள் பாலம் இடிந்து விபத்து! 91 பேர் பலி; பலரை காணவில்லை

0
324

குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், தொடர்ந்து மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

குஜராத் மாநிலத்தில் மாச்சூ ஆற்றில் கேபிள் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பலர் காயமடைந்துள்ளதாகவும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து! 91 பேர் பலி - பலர் காணாமல்போயுள்ளதாக தகவல் | India Bridge Accident 40 People Died

முதலாம் இணைப்பு

குஜராத்தின் மோர்பி நகரில் கட்டப்பட்ட கேபிள் பாலமொன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது.

குறித்த பாலத்தினை பழுதுபார்க்கும் பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில்  கடந்த 26 ஆம் திகதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டு பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று 500-க்கும் மேற்பட்டோர்  பாலத்தில் இருந்தபோது, திடீரென பாலம் இடிந்து விழுந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து! 91 பேர் பலி - பலர் காணாமல்போயுள்ளதாக தகவல் | India Bridge Accident 40 People Died

பலி எண்ணிக்கை

இந்த சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 இற்கும் மேற்பட்டோர் வைததியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குஜராத் மாநிலத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து! 91 பேர் பலி - பலர் காணாமல்போயுள்ளதாக தகவல் | India Bridge Accident 40 People Died

இருப்பினும் ஏராளமானவர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதுடன், பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள், பொலிஸார் என பலரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய, முதற்கட்டமாக 100 பேர் ஆற்றுக்குள் சிக்கி உள்ளதுடன், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .2 இலட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

https://www.taatastransport.com/