பெண்கள் நடிப்பில் பெண்களால் உருவான பிரமாண்ட திரைப்படம்!

0
430

ஆப்ரிக்க தேசமான தஹோமேயில் 1800களில், அந்த தேசத்தை காக்க, முழுவதும் பெண்களே பங்குகொண்ட அகோஜி என பெயர் கொண்ட ஒரு படையின் வீர தீர செயல்பாடுகளை கதையாக சொல்லும் தி உமன் கிங் ஹாலிவுட் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உயரிய உடை அலங்காரங்கள், பிரமாண்டமான காட்சியமைப்புகள், அசர வைக்கும் போர் காட்சிகள் என அதிக பொருட்செலவில் தி உமன் கிங் படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் உருவாகியுள்ளது.

பெண்கள் நடிப்பில் பெண்களே உருவாக்கிய பிரமாண்ட ஹாலிவுட் திரைப்படம்! | Hollywood Movie Made By Women Starring Women

இயக்குனர் முதல் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அதிகபட்சமாக பெண்களே பங்குபெற்றுள்ளனர். வியோலா டேவிஸ்(Viola Davi), துஸோ மெபெடு(Tuso Mebedu), லஷனா லைன்ச்(Lashana Lynch) உள்ளிட்ட நடிகைகள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அந்த வகையில் நடிகைகள் மட்டுமே நடித்துள்ள படம் என்ற சிறப்பையும் இது பெறுகிறது. ஜினா பிரின்ஸ் பைத்உட்(Gina Prince Bythwood) இப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் தமிழிலும் திரைக்கு வர உள்ளது.