கர்ப்பிணியின் வயிற்றை வெட்டி பிறக்­காத குழந்­தையை எடுத்த யுவதி ; கொடூரத்தின் உச்சம்!

0
559

கர்ப்­பி­ணி­ பெண்­ணொ­ரு­வரை கொலை­செய்து, பிறக்­காத குழந்­தையை அவரின் வயிற்றை வெட்டி எடுத்த யுவதி ஒருவர் கொலைக் குற்­ற­வாளி என அமெ­ரிக்க நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

29 வய­தான டெய்லர் ரெனி பார்க்கர்(Taylor Renee Parker)எனும் யுவ­தியே குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­டுள்ளார். 2020 ஒக்­டோ­பரில், டெக்ஸாஸ் மாநி­லத்தின் நியூ பொஸ்டன் நக­ரி­லுள்ள வீட்டில் வைத்து, றீகன் மைக்கல் சிமோன்ஸ் ஹன்கொக்(Reagan Michael Simmons Hancock )எனும் 21 வயது யுவ­தியை டெய்லர் பார்க்கர் கொலை செய்­தா­ரென குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

கர்ப்பிணியின் வயிற்றை வெட்டி பெண்ணொருவர் செய்த கொடூரம்! | Woman Who Cut The Stomach Of A Pregnant Woman

டெய்லர் ரெனி பார்க்கர்(Taylor Renee Parker) சுமார் 10 மாத கால­மாக தான் ஒரு கர்ப்­பிணி போன்று நடித்­து­வந்தார். பின்னர் றீகன் மைக்கல் சிமோன்ஸ் ஹன்­குக்கை தலையில் தாக்­கியும் கத்­தியால் பல தவைகள் குத்­தியும் கொலை செய்து, அவரின் வயிற்றை வெட்டி குழந்­தையை கடத்திச் சென்றார் என குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

பின்னர் அப்­பெண்­கு­ழந்தை உயி­ரி­ழந்­தாக தெரியவந்துள்ளது. சிமோன்ஸ் ஹன்­குக்கின் 3 வயது மகளும் அவ்­வே­ளையில் வீட்டில் இருந்­த­தா­கவும் நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது.

கர்ப்பிணியின் வயிற்றை வெட்டி பெண்ணொருவர் செய்த கொடூரம்! | Woman Who Cut The Stomach Of A Pregnant Woman

றீகனின் வயிற்றை வெட்டி, குழந்­தையை டெய்லர் எடுத்­த­போது, சிமோன்ஸ் ஹன்குக்(Reagan Michael Simmons Hancock ) உயி­ருடன் இருந்தார் என அரச தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் கூறினர்.

இவ்­வ­ழக்கில் டெய்லர் (Taylor Renee Parker)ரெனி பார்க் கர் குற்­ற­வாளி என நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

அவ­ருக்கு மரண தண்­டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப் பட வேண்டும் என அரச தரப்பு சட்டத் தரணிகள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.