மூன்று இளம் பிக்குகள் பௌத்த மதகுருவால் பாலியல் துஷ்பிரயோகம்

0
537

கல்முனை பகுதி விஹாரை ஒன்றில் வைத்து மூன்று இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை கைது செய்ய பொலிஸாரினால் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை – கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை ஒன்றில் புதிதாக இணைந்த 3 இளம் பிக்குகள் திடீர் சுகயீனம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த மாதம் (ஓகஸ்ட்) இறுதி பகுதியில் இளம் பிக்குகளின் பெற்றோரினால் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் குறித்த வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைய அம்பாறை பொது வைத்தியசாலையில் உள்ள பிக்குகளுக்கான தனியான சிகிச்சை பிரிவிற்கு மூன்று இளம் பிக்குகளும் வைத்திய பரிசோதனைக்காக மாற்றப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியிடம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மூன்று இளம் பிக்குகளுக்கு பெளத்த மதகுருவால் நேர்ந்த கொடூரம்! | Three Young Bhikkhu Abuse Buddhist Priest Kalmunai

இந்த நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 இளம் பிக்குகளும் தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தலைமை பௌத்த துறவியினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகிதாக சட்ட வைத்திய அதிகாரியிடம் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை அடுத்து குறித்த மூன்று இளம் பிக்குகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரியும் தனது வைத்திய அறிக்கை ஊடாக அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பில் மருத்துவ அறிக்கை பிரகாரம் செப்டம்பர் 01 ஆம் திகதி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின் பேரில் மாவட்ட சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் வைத்தியசாலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதன் பின்னர் குறித்த சம்பவ விசாரணை அறிக்கை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பிரகாரம் செப்டம்பர் 05ம் திகதி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக தயார் படுத்தபட்டது.

மூன்று இளம் பிக்குகளுக்கு பெளத்த மதகுருவால் நேர்ந்த கொடூரம்! | Three Young Bhikkhu Abuse Buddhist Priest Kalmunai

இதற்கமைய செப்டம்பர் 06-ம் திகதி துஸ்பிரயோகம் காரணமாக பாதிக்கப்பட்ட மூன்று இளம் பிக்குகள் சார்பாக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் வழங்குகள் கல்முனை தலைமையக பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டன.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது சம்பவத்தில் மூன்று இளம் பிக்குகளை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியதாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபராக கருதப்படும் பௌத்த மதகுரு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட இளம் பிக்குகளின் பெற்றோர் ஏற்கனவே வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அம்பாறை பகுதியில் இருந்து வருகை தந்த விசேட பொலிஸார் கல்முனை பகுதியில் உள்ள குறித்த பௌத்த விஹாரைக்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன் சந்தேக நபரான பிரதான பௌத்த மதகுருவிடம் வாக்குமூலங்களை பொலிஸார் பெற்று இருந்தனர்.

மேலும் இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம் பிக்குகளின் ஆசன பின்துவாரத்தில் காயங்கள் மற்றும் தழும்புகளும் காணப்படுவதுடன் மூவரும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகி உள்ளமை வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டன.

மேலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சகோதரர்களான   08, 13, 14 வயது மதிக்கத்தக்க 3 இளம் பிக்குகளும் ஏற்கனவே அம்பாறை புறநகர் பகுதி ஒன்றியில் இருந்து துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அண்மையில் கல்முனை பகுதியில் உள்ள பௌத்த விஹாரைக்கு புதிதாக இணைக்கப்பட்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது குறித்த பௌத்த மதகுரு தலைமறைவாகி உள்ளதாகவும் விசேட பொலிஸ் குழுவினர் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் பொலிஸாரினால் சந்தேக நபராக இனங்காணப்பட்ட பிரதான பௌத்த மதகுரு கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்த படுதல் தொடர்பில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதியாக ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் செயற்பட்டு வருவதுடன் கல்முனை பிராந்தியத்தில் உள்ள ஒரே ஒரு விஹாரையாக செயற்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.