இலங்கை தேசிய கீதம் குறித்து சரித் சேனாநாயக்கவின் முகநூல் பதிவு!

0
583

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித் சேனாநாயக்க இலங்கையின் தேசிய கீதம் தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பொன்றை பதிவிட்டிருந்தார்.

இந்த குறிப்பின் ஆரம்பத்தில் பொதுமக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறவே இந்த ஒரு பதிவு என்று கூறுகிறார்.

இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் கூறுகையில்,

சர்வதேச போட்டிகளுக்கு இலங்கை அணிகள் ஒன்று கூடும் போது தேசிய கீதம் சற்று குறைவாக இருந்தால் நன்றாக இருக்கும். மூன்று நிமிடங்களுக்கு மேல் நீளமான இலங்கை தேசிய கீதம் முடியும் தருவாயில் பார்வையாளர்களின் கவனமும் தேசிய கீதத்துக்குரிய கௌரவமும் பெரும்பாலும் இழக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அத்துடன், இவ்வாறான நீண்ட தேசிய கீதங்களைக் கொண்ட பல நாடுகள் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் சுறுக்கப்பட்ட தேசிய கீதங்களைப் பயன்படுத்த முனைவதாகவும் இலங்கையும் அவ்வாறே செயற்படுவது காலத்துக்கு பொருத்தமானது எனவும் சரித் சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

குளிர்ந்த காலநிலையில் நீண்ட தேசிய கீதம் முடியும் வரை நிற்கும் வீரர்களின் உடல் வெப்பநிலை கூட சில நேரங்களில் குறைகிறது என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்

மேலும், தேசிய கீதத்திற்கு பூரண மரியாதையுடனேயே இந்த பதிவை இடுவதாகவும் தேசிய கீதத்திற்கு அவமரியாதை செய்யும் நோக்கம் இல்லை எனவும் இங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.