பிரிட்டனின் மகாராணியை சந்தித்து ஆசி பெற்ற புதிய பிரதமர்

0
402

பிரித்தானியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் டிரஸ் (Liz Truss) பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தை (Queen Elizabeth II) சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் (Boris Johnson) விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2-ம் திகதி முடிவடைந்தது.

இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்குக்கும், (Rishi Sunak)  தற்போதைய வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

மாகராணியை சந்தித்து ஆசி பெற்றார் பிரித்தானியாவின் புதிய பிரதமர் | New Prime Minister Of Uk Met Queen Elizabeth Liz

புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்தனர். வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

ஆளும் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பிரித்தானியாவின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார்.

இந்த நிலையில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை லிஸ்டிரஸ் நேற்று சந்தித்து ஆசி பெற்றார்.

அப்போது, ராணி எலிசபெத் லிஸ் டிரஸை பிரதமராக அறிவித்தார். தொடர்ந்து அவர் பிரதமராக பதவியேற்கயுள்ளார்.

மாகராணியை சந்தித்து ஆசி பெற்றார் பிரித்தானியாவின் புதிய பிரதமர் | New Prime Minister Of Uk Met Queen Elizabeth Liz