இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் கோரிக்கை!

0
393

இலங்கை மக்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அர்த்தமுள்ள ஆதரவை வழங்குவதற்கு கூடுதல் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க காங்கிரஸின் பத்து உறுப்பினர்கள் தங்கள் வெளியுறவுத்துறை செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கன் மற்றும் USAID நிர்வாகி சமந்தா பவர் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், பத்து காங்கிரஸார்களும் இலங்கை தற்போது எதிர்கொள்ளும் முன்னோடியில்லாத மற்றும் பேரழிவுகரமான பொருளாதார நெருக்கடியால் ஆழ்ந்த கவலையில் இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதன்போது இலங்கை மக்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்ய இராஜாங்க திணைக்களம் மற்றும் USAID மேற்கொண்டுள்ள முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் நெருக்கடியின் அளவு மற்றும் தாக்கத்தை கருத்தில் கொண்டு இலங்கைக்கு அர்த்தமுள்ள ஆதரவை வழங்க கூடுதல் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.