நேரலையில் முதல்வர் டக் போர்ட்டின் வாய்க்குள் நுழைந்த தேனீ

0
115

ஒன்றாரியோ முதல்வர் டக் போர் தேனீ ஒன்றை விழுச்சிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த சம்பவம் மாகாணத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அறிவிக்கும் நேரலை ஊடக சந்திப்பிலே இடம்பெற்றுள்ளது.

ஒன்றாரியோவின் டுன்டாக்கில் இந்த செய்தியாளர் சந்திப்பில் நடைபெற்றது. சிறிய கிராமம் ஒன்றில் 500,000 டொலர் முதலீட்டு திட்டமொன்று குறித்து அறிவித்துக் கொண்டிருந்த போது போர்ட்டின் முகத்தை தேனீ வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

அதனை பொருட்படுத்தாது உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீரென தேனீ முதல்வர் போர்ட்டின் வாய்க்குள் நுழைந்து தொண்டை வரையில் புகுந்து விட்டது.

இதனால் நேரலை அவதிப்பட்ட முதல்வர் போர்ட், தான் தேனீ ஒன்றை விழுங்கிவிட்டதாக ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார்.

“தாம் நலமாக இருப்பதாகம் தேனீ தனது உடலுக்குள் எங்கேனும் ஒர் குடியிருப்பில் தற்பொழுது குடியேறியிருக்கும் எனவும் நகைச்சுவையாக ஊடகவியலாளர்களிடம் டக் போர்ட் தெரிவித்தார்.

நேரலையில் முதல்வர் டக் போர்ட்டின் வாய்க்குள் நுழைந்த தேனீ | Doug Ford Swallows Bee

இதேவேளை, முதல்வர் டக் போர்ட் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவருக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது எனவும் அவரது ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.