13 வயதில் மருத்துவ கல்லூரிக்கு செல்லும் அமெரிக்க மாணவி!

0
530

அமெரிக்காவில் 13 வயது மாணவி ஒருவர் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெறுவதற்கு தகுதி பெற்றுக் கொண்டுள்ளார்.

அலெனா அனலே (Alena Analeigh) என்ற 13 வயது சிறுமியை இவ்வாறு மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றுக் கொள்வதற்கு தகுதி பெற்றுக் கொண்டுள்ளார்.

தனது 12ம் வயதில் உயிர் நிலைப்பள்ளி கற்கைகளை பூர்த்தி செய்து மருத்துவக் கல்லூரிக்கு தகுதியை பெற்றுக் கொண்டுள்ளார்.

தமது கனவுகளையும் இலக்குகளையும் எட்டுவதற்காக கடின முயற்சியும் உழைப்பையும் வழங்கி வருவதாக சிறுமி சமூக ஊடக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மிகப் பிரபலமான மருத்துவ கல்லூரி ஒன்றில் அலெனா அனலே (Alena Analeigh) கல்வியை தொடர உள்ளார்.

உயர்நிலைப் பள்ளியில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும் மாணவ மாணவியருக்கு முன்கூட்டியே பட்ட கற்கை நெறிகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அந்த வகையில் குறித்த சிறுமி தனது 12 வது வயதில் உயர்நிலை பள்ளி கற்கையை பூர்த்தி செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய 13 வயது சிறுமிகளைப் போலவே தாமும் இருப்பதாக அலெனா அனலே (Alena Analeigh) தெரிவித்துள்ளார்.

13 வயதில் மருத்துவ கல்லூரி செல்லும் மாணவி! | This13 Year Old Is Headed To Medical School

இந்த மாணவி ஏற்கனவே அரிசோனா மாநில பல்கலைக்கழகத்திலும், ஹோக்வுட் பல்கலைக்கழகத்திலும் இரு வேறு பட்ட கற்கைநெறிகளை ஏற்கனவே கற்று வருவதாகவும், அவை உயிரியல் விஞ்ஞானம் தொடர்பான பட்டங்கள்  எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மிக இளவயதில் இவ்வாறு பல கற்கைநெறிகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனது மகளின் அசாதாரண திறமைகளை ஆரம்பத்திலேயே கண்டு கொண்டு அதனை ஊக்கப்படுத்தியதாக சிறுமியின் தாய் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.