கனடாவில் பேருந்து சாரதியை கத்தியால் குத்த முயன்ற பெண் கைது

0
60

கனேடிய நகரமொன்றில் பேருந்து சாரதி ஒருவரை நோக்கி பெண் ஒருவர் கத்தியுடன் பாய உயிர் தப்புவதற்காக அந்த சாரதி பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியே குதித்த சம்பவம் ஒன்று நடைபெற்றது.

ஞாயிறன்று வின்னிபெக் நகரில் பேருந்து ஒன்றில் ஏறிய ஒரு பெண் பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதைக் கண்ட அந்த பேருந்தின் சாரதி பேருந்தை ஓரங்கட்டி அந்தப் பெண்ணை பேருந்திலிருந்து இறங்குமாறு கூற சட்டென கத்தி ஒன்றை உருவியபடி சாரதியை நோக்கிப் பாய்ந்துள்ளார் அந்த பெண்.

பயணிகளை பேருந்திலிருந்து வெளியேறும்படி கூறிய அந்த சாரதி தான் தப்புவதற்காக பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியே குதித்துள்ளார். உடனே அந்தப் பெண் அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார். ஆனால் பொலிசார் அவரைத் துரத்திச் சென்று டேஸர் உதவியுடன் மடக்கிப் பிடித்துள்ளார்கள்.

பொலிசார் வெளியிட்டுள்ள செய்தியில் 41 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது ஆயுதம் கொண்டு தாக்குதல ஆயுதம் வைத்திருத்தல் முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கனடாவில் பேருந்து சாரதி ஒருவரைக் கத்தியால் குத்த முயன்ற பெண் கைது | Winnipeg Transit Knife Attack