மக்கள் மத்தியில் திருட்டு அதிகம் நடக்கும் நாடு சுவிஸ்!

0
563

சுவிட்சர்லாந்து நாட்டு மக்கள் மத்தியில் திருட்டுப் பழக்கம் காணப்படுவதாக கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் சுமார் 40% மாணவர்கள் பொது போக்குவரத்து செய்யும் போது டிக்கெட் எடுப்பதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடைகளில் திருடுதல் முதல் கட்டணம் செலுத்துவதை தவிர்த்தல் வரையில் பல்வேறு வகையில் திருட்டுக்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் சுமார் 1500 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் திருட்டில் ஈடுபடவில்லை என வெறும் 40% ஆனவர்கள் மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.

ஏனையவர்கள் கடைகளில் அல்லது பொது போக்குவரத்து பயணங்களின் போது திருட்டுகளில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் பொதுவாக அதிக அளவில் இடம்பெறும் திருட்டாக பொதுப் போக்குவரத்தில் கட்டணம் செலுத்தாது பயணம் செய்வது காணப்படுகின்றது.

சுமார் 10 பேரில் நான்கு பேர் கட்டணம் செலுத்துவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடையென்றில் திருடுவது உடன் ஒப்பீடு செய்யும் போது ரயிலில் டிக்கெட்டின்றி பயணம் செய்வது ஒரு பெரிய தவறாக சமூகத்தில் கருதப்படாமை காரணமாக அநேகர் பொது போக்குவரத்தில் இவ்வாறு கட்டணம் செலுத்தாது பயணங்களை மேற்கொண்டுள்ளதாக கருத்துக்கணிப்பு நடத்திய நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது.

தாங்கள் தொழில் புரியும் இடங்களில் ஏதாவது ஒரு காலத்தில் குறைந்தபட்சம் ஒரு தடவையேனும் களவாடியுள்ளதாக 27 விதமானவர்கள் தெரிவிக்கின்றனர் .

ஹோட்டல்களிலும் இவ்வாறு மக்கள் திருட்டுக்களில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

பெண்களை விட ஆண்களுக்கு திருடுவதற்கான ஆர்வம் அதிகமாக காணப்படுவதாகவும் வயது முதிர்ந்தவர்களை விட இளையவர்கள் திருட்டுகளில் ஈடுபடுவதாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது