வெட்கம் கெட்ட செயல்! – சுமந்திரன்

0
87

ஜனாதிபதிக்கு எதிரான தீர்மானத்தை வரைகின்ற போது ரணிலும் இணைந்து தான் செயற்பட்டார். ஆனால் அவருக்கு பிரதம மந்திரியாக பதவி வழங்கியதும் அதற்கு மாறாக செயற்பட்டது வெட்கம் கெட்ட செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

“ராஜபக்சர்களின் ஆட்சியை நீடிப்பதற்கு நாங்கள் எந்த விதத்திலும் துணை போக முடியாது. ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடு ராஜபக்சர்களை பாதுகாப்பதற்கானது என்பது முழு நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் தெரிந்த உண்மை.

முக்கியமான தீர்மானங்களின் போது பேரம் பேசப்படுவதாக ஒரு யூகம் வெளியாகும். ஆனால் எனக்கு தெரிந்து எங்களுடைய கட்சி உறுப்பினர்கள் யாரும் இந்த தீர்மானங்களை எடுக்க பேரம் எதுவும் பேசவில்லை.  

ஆனால் முன்னர் இருந்த இரு நாடாளுமன்றங்களில் ஒவ்வொருவர் இவ்வாறு பேரம் பேசுதலுக்கு போயிருக்கிறார்கள். 2010 இல் பியசேன கட்சி மாறி 18 ஆம் திருத்தத்திற்கு வாக்களித்தார். அவரை நாங்கள் கட்சியில் இருந்து நீக்கினோம். 2015 ஆம் ஆண்டு வியாழேந்திரன் கட்சி மாறி வாக்களித்தார். அவரையும் கட்சியிலிருந்து நீக்கினோம்”என கூறியுள்ளார்.