ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள அதிரடி முடிவு! ஆளுநருக்கு ஆப்பு

0
328

நாட்டின் தற்போதுள்ள ஆளுநர்களுக்கு பதிலாக புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, தற்போதைய ஆளுநர்கள் பலர் இன்னும் சில நாட்களில் பதவி விலக உள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு நெருக்கமானவர்கள் பலர் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனைத்து கட்சிகளையும் உள்ளடங்கிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அந்த வகையில், தற்போதுள்ள அமைச்சு பதவிகளுக்கு மேலதிகமாக 12 அமைச்சு பதவிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும், 30 இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தற்போதை அரசாங்கத்திற்கு அதரவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.