நாளை மீண்டும் இயங்கவுள்ள ஜனாதிபதி செயலகம் – ரணில்

0
424

இலங்கையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இயங்காத ஜனாதிபதி செயலகம் நாளை முதல் முழுமையாக செயற்பட வைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தீர்மானித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆக்கிரமித்த போது கட்டடத்தின் சில பகுதிகளில் சேதமடைந்துள்ளன.

ஜனாதிபதி செயலம் தொடர்பில் ரணில் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்! | Sri Lanka Presidential House Protesters Ranil

கதவுகள், ஜன்னல்களை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கான சாட்சியங்களை சேகரிப்பதற்காக கொழும்பு மத்திய பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ் விசேட குற்றப் பிரிவு மற்றும் கைரேகை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலம் தொடர்பில் ரணில் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்! | Sri Lanka Presidential House Protesters Ranil

கோட்டை பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது,

மேலும் குற்றவியல் அதிகாரிகள் மற்றும் சிறப்பு கைரேகை புலனாய்வு அதிகாரிகள் மூலம் தடயவியல் ஆதாரங்கள் ஜனாதிபதி செயலகத்தில் சேகரிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலம் தொடர்பில் ரணில் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்! | Sri Lanka Presidential House Protesters Ranil

கடந்த 9ஆம் திகதி அன்று போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டதுடன் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.