சேலைன் போத்தலுடன் வாக்களிக்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர்!

0
620

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் வாக்களிப்பதற்காக வைத்தியசாலையிலிருந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் சேலைன் போத்தலுடன் காணப்பட்டார். வைத்தியசாலையிலிருந்து நாடாளுமன்றம் வந்து வாக்களித்துள்ளார்.

சுகயீனம் காரணமாக அவர் முன்னுரிமை அடிப்படையில் தமது வாக்கினை பதிவு செய்திருந்ததுடன் வாக்களித்ததன் பின்னர் அவர் வைத்தியசாலைக்கு செல்லவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் அறிவித்திருந்தார்.

samanpriya herath

அதேவேளை புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் முதலாவதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தனது வாக்கினை பதிவு செய்துள்ளதோடு அடுத்ததாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் வாக்கினை பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து பேர் குறிப்பிட்டு அழைக்கப்படும் உறுப்பினர்கள் தமது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அத்துடன் இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்விற்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச சமூகமளித்துள்ளார்.