சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுடனான (Mohammed bin Salman) சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் (Jamal Khashoggi) கொலை குறித்து தான் எழுப்பியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ. பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவுடனான உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப அங்கு சென்றுள்ள ஜோ பைடன் 2018 ஆம் ஆண்டு நடந்த கொலை தனக்கும் அமெரிக்காவிற்கும் மிகவும் முக்கியமானது என்பதை தெளிவுபடுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

ஜெட்டாவில் உள்ள அரச அண்மையில் இடம் பெற்ற இச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பைடன் (Joe Biden) ‘இந்த கேள்வியை நான் நேரடியாக கேட்டேன்’ ஆனால் இந்த கொலைக்கு தன்னிப்பட்ட முறையில் என்று அவர் கூறினார்.

ஆனால் இரு நாடுகளும் மற்ற விஷயங்களில் ஒப்பந்தங்களை எட்டியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு இந்த சந்திப்பின் போது அமெரிக்கா அமைதிகாக்கும் படையினர் இந்த ஆண்டு இறுதிக்குள் செங்கடல் தீவான தீரானை விட்டு வெளியேறுவார்கள் என்றும் உறுதியளித்தார்.
துருக்கியின் இஸ்தான் புல்லில் உள்ள சவூதி துணை தூதரகத்தில் 2018 ஆம் ஆண்டு னக்டொபரில் அமெரிக்காவை தலமாக கொண்ட சவூதி ஊடகவியலாளர் கஷோகி (Jamal Khashoggi) கொல்லப்பட்டார்.

இந்த கொலைக்கு பட்டது இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammed bin Salman) ஒப்புதல் அளித்ததாக அமெரிக்கா புலனாய்வு அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் இந்த குற்ற சாட்டுகளை இளவரசர் (Mohammed bin Salman) மறுத்துள்ளார்.