வெளிநாட்டு இராணுவம் இலங்கைக்குள் நுழையும் அபாயம்!

0
522
Royal Marines from 40 Commando on patrol in the Sangin area of Afghanistan are pictured (left) with the newly introduced L129A1 or Sharpshooter 7.62mm rifle and (right) an SA80 assault rifle. Both Marines are wearing newly issued Mk7 helmets and Mk8 Osprey body armour and are dressed in Multi Terrain Pattern (MTP) camouflage.

நாடு அரசியல் ரீதியில் ஸ்திரமற்று இருக்கையில் வெளிநாட்டு இராணுவங்கள் நாட்டுக்குள் நுழைஉம் அபாயம் உள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

இலங்கையின் நிலைமை மோசமடைந்துள்ளதாக தெரிவித்து வெளிநாட்டு இராணுவங்கள் நாட்டுக்குள் நுழைந்து, எமது சுதந்திரம் மற்றும் உரிமைகளை இல்லாமலாக்கி, அம்மகளின் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதற்கு இடமிருக்கிறதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டிருப்பதை போராட்டக்காரர்களாலும் அரசியல் கட்சிகளாலும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மேலும் ஆட்சியாளர்கள் அதிகாரங்களை பயன்படுத்த முயற்சிப்பது அரசியல் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் மேலும் எச்சரித்தார்.