நோயாளியின் மரணத்தினால் பதவியிழந்த கனடா மாகாண சுகாதார அமைச்சர்

0
118

கனடாவின் நியூ பிறவுன்ஸ்விக் மாகாணத்தில் நோயாளி ஒருவர் உயிரிழந்தமை காரணத்தினால் மாகாண சுகாதார அமைச்சர் டோர்த்டீ ஷெப்பர்ட் (Dorothy Shephard) பதவி நீக்கப்பட்டுள்ளார்.

மாகாண சுகாதார அமைச்சரை முதல்வர் பிலெய்ன் ஹிக்ஸ் (Blaine Higgs) உடன் அமுலுக்கு வரும் வகையில்  சுகாதார அமைச்சர் டோர்த்டீ ஷெப்பர்ட் (Dorothy Shephard) பதவி நீக்கம் செய்துள்ளார்.

பெட்ரிக்டோன் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாகாண சுகாதார அமைச்சர் டோர்த்டீ ஷெப்பர்ட் (Dorothy Shephard) முதல்வர் ஹிக்ஸ் பதவி நீக்கியுள்ளார்.

மாகாண சுகாதார முறைமை குறித்து திருப்தி கொள்ள முடியாது எனவும் நோயாளியின் மரணம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் ஹிக்ஸ் (Blaine Higgs) தெரிவித்துள்ளார்.

சுகாதார கட்டமைப்பு அடிப்படை ரீதியான மாற்றங்களுக்கு உட்பட வேண்டியது அவசியமாகின்றது என அவர்  (Blaine Higgs)  சுட்டிக்காட்டியுள்ளார்.

நோயாளியின் மரணத்தினால் பதவியிழந்த கனடா   மாகாண சுகாதார அமைச்சர் | New Brunswick Higgs Health Minister

மாகாணத்தின் புதிய சுகாதார அமைச்சராக புருஸ் பிட்ச் (Bruce Fitch) நியமிக்கப்பட்டுள்ளார்.

நோயாளி ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் காத்திருந்த போது உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்படும் என மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், சுகாதார அமைச்சர் பதவியை இழந்த டோர்டி ஷெப்பர்டிற்கு (Dorothy Shephard) சமூக அபிவிருத்தி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் இடம்பெற்ற ஹொரிசான் சுகாதார வலையமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரியையும் முதல்வர் பணி நீக்கியுள்ளார்.