ரணில் விக்கிரமசிங்க ஒரு ஆபத்தான பிரிவினைவாத சிந்தனையாளர்!

0
460

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அவரது பதவி காலம் முடியும் வரை பதவி விலகாது வெளியே இருந்து கொண்டு பதில் ஜனாதிபதி ஒருவரை வைத்து நாட்டை ஆள முடியும் என சொல்கிறார்கள். அது உண்மையானால் மக்களின் நிலை மிக ஆபத்தானதாக இருக்கும்.

ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) பதில் ஜனாதிபதியானதும் முன்னைய ஜேஆர் போல செயல்பட ஆரம்பித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இலங்கையில் நடந்த பெரும் இரத்த ஆறு ஓடிய நிகழ்வுகளுக்கு அவர் காரணமாக இருந்தார்.

அதே ஜேஆரின் பாசறையில் வளர்ந்த மருமகன் ரணில் அமைதியானவர் போல இருந்தாலும் மிக ஆபத்தானவராக செயல்படுவார் என நினைக்கத் தோன்றுகிறது.

ரணில் பதில் ஜனாதிபதியான பின் அரகலய பூமியில் சில பிரச்சனைகள் தலை தூக்கியுள்ளன. இதன் மூளையாக ரணில் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கியுள்ளன.

அர்ப்பாட்டத்தை நீர்த்து போகவும் ஒருபோதும் கிடைக்கும் என நினைக்காத ஜனாதிபதி கனவை அனுபவிக்க காய்களை நகர்த்துவதாக தெரிகிறது.

பலமான புலிகளையே பலமிழக்கச் செய்த ரணிலால் இந்த அமைதி போராட்டத்தை தன் காய் நகர்த்தலால் நீர்த்து போகச் செய்ய முடியாதா? என சிங்களவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அநேகரின் எதிர்ப்புக்கு மத்தியில் பதவி விலக விரும்பாமல் போராடும் மக்களை பாசிசவாதிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

இந்த நேரத்தில் ரணிலை ஆதரிப்பதை விட வாழும் நாட்டையும் நாட்டு மக்களையும் ஆதரியுங்கள். இல்லாது போனால் முன்னர் ராஜபக்சவினரை ஆதரித்தது போலாகிவிடும். என குறித்த கருத்தை ஜீவன் பிரசாத் என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.