இலங்கை நிலவரம் – ஐநா செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளது என்ன?

0
176

ஆர்ப்பாட்டக்காரர்களின் துயரங்களிற்கும் தீர்வை காண்பது அவசியம் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நிலவரத்தை நான் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றேன்

மோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் துயரங்களிற்கும் தீர்வை காண்பது அவசியம்.

அமைதியான மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான சமரச மனப்பான்மையை ஏற்றுக்கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களையும் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.