கைப்பற்றிய இடங்களை விட்டு வெளியேறும் போராட்டகாரர்கள்!

0
480

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றிலிருந்து போராட்டகாரர்கள் வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி அங்கிருந்து அமைதியான முறையில் வெளியேறவுள்ளதாக கோட்ட கோ கம எதிர்ப்புப் பிரச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

கைப்பற்றிய இடங்களில் இருந்து வெளியேறும் ஆர்ப்பட்டக்காரர்கள்! | Rebels Leaving The Captured Places

எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகம் பழைய பாராளுமன்றம் மற்றும் காலி முகத்திடலை தொடர்ந்தும் ஆக்கிரமித்து போராட்டத்தை முன்னெடுப்போம் என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அமைதியான முறையில் போராட்டம் தொடரும் என கோட்ட கோ கம போராட்ட செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.