கலிபோர்னியாவில் துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த புதிய சட்டம்!

0
118

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், துப்பாக்கி உற்பத்தியாளர்கள் மீது வழக்கு தொடரும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிகளவில் நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், சண்டைகள், கொலைகள் உள்ளிட்டவைகளை தடுக்கும் வகையிலான புதிய சட்ட மசோதாவுக்கு மாகாண ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் நேரடியாக துப்பாக்கி உற்பத்தியாளர்கள் மீது வழக்கு தொடரலாம் என மாகாண நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.