இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கோட்டபாய – பதவி விலகல் கடிதத்திலும் கையெழுத்திட்டார்!

0
85

தனது பதவி விலக கடிதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கையெழுத்து இட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தில் ஜூலை 13 ஆம் திகதி என குறிப்பிட்டு நேற்று கையொப்பமிட்டுள்ளார். அதனை சபாநாயகர் நாளை பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிப்பார் எனவும் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கையொப்பமிடப்பட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அவர் அதை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளார்.

நேற்று மதியம் ஜனாதிபதி ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என செய்திகள் வெளியானது. எனினும் இந்த அறிக்கையை ஜனாதிபதிக்கு நெருக்கமான மூத்த வட்டாரங்கள் நிராகரித்துள்ளன.

இராணுவனத்தின் பூரண கட்டுப்பாட்டில் விமான நிலையம் ஒன்றில் கோட்டபாய வைக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.