ஹரீன் மற்றும் மனுஷவிற்கு கதவடைத்த ஐக்கிய மக்கள் சக்தி!

0
158

ஐக்கிய மக்கள் சக்தி என்பது சலூன் கதவு போலல்ல, கட்சியில் இருந்து விலகிய எவரும் மீண்டும் கட்சியில் இணைத்து கொள்ளப் படமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

கட்சி தீர்மானத்தை மீறி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஹரீன் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை முற்றுகையுடன் தமது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுவார்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே ரஞ்சித் மத்தும பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சித் மத்தும பண்டார