விறகு தேடி சென்றவர் தேயிலைத் தோட்டத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு!

0
235

பள்ளகெவடுவ – இந்தகல தோட்டத்தில் (6ஆம் நம்பர் பிரிவில்) விறகு சேகரிக்க சென்ற முதியவர் தேயிலைத் தோட்டத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று காலை 09.30 அளவில் பள்ளகெவடுவ இந்தகல தோட்டத்தில் விறகு சேகரிக்க சென்ற 60 வயது துரைசாமி செல்லதுரை என்பவரே உயிரிழந்தார்.

அவர் விறகு சேகரித்துக் கொண்டிருந்த போது தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோர் குறித்த பிரதேசத்திற்கு கள விஜயம் மேற்கொண்டிருந்ததாகவும் அவர்களால் விரட்டியடிக்கப்பட்ட முதியவர் அச்சத்துடன் அங்கிருந்து வீடு திரும்பும் சந்தர்ப்பத்தில் தேயிலை மலையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக அந்த பகுதியில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பண்டாரவளை நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதுடன் இந்த உயிரிழப்பு குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் பள்ளகெவடுவ பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.