எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!

0
252

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

காலி -மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த இரு குழுக்களுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் 25 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் இச் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி! | One Person Died In The Conflict In The Fuel Line