யாழ் மானிப்பாயில் 630 லீற்றர் எரிபொருளுடன் சிக்கிய இளைஞன்!

0
240

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உரிமம் இன்றி 630 லீற்றர் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் வீட்டில் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் யாழ்.முகாமிற்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

யாழில் 630 லீற்றர் எரிபொருளுடன் சிக்கிய இளைஞன்!

இதையடுத்து, நேற்று (24) இரவு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 27 வயதுடைய இளைஞர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக அவர் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.