3 நாட்கள் காத்திருப்பு; சாப்பிட சென்றதால் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள்!

0
354

எரிபொருள் வரிசையில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை வடிகானில் தள்ளிவிட்ட சம்பவம் ஒன்று மினுவாங்கொடை தெவொலபொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மூன்று நாட்களாக வரிசையில் காத்திருந்து எரிபொருள் இல்லாததால் மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவர் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுச்சென்ற நிலையில் பின்வரிசையில் நின்றவர்களால் குறித்த கீழ்த்தரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த குறித்த நபர் அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.