சாம் தம்பிமுத்து படுகொலை தொடர்பில் விடுதலைப் புலிகளின் தளபதி வாக்குமூலம்! 

0
488

மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவை விடுதலைப்புலிகளே படுகொலை செய்தார்கள் என சுவிட்சர்லாந்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண மூத்த தளபதி காந்தன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மூத்த ஊடகவியலாளர் வேதனாயம் தலைமையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் மக்கள் சந்திப்பில் இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.  

முக்கியஸ்தர் கொலை தொடர்பில் விடுதலைப்புலிகள் மூத்த தளபதி சுவிட்சர்லாந்தில் பரபரப்பு வாக்கு மூலம் (Video)

கொழும்பில் வைத்து இனம் தெரியாத நபர்களால் 1990ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்து தொடர்பில் அரச தரப்பு விடுதலைப்புலிகள் தொடர்பு எனக் கூறினாலும் விடுதலைப் புலிகள் இக்கொலையுடன் தொடர்புபட்டதை யாரும் இது வரை நிருபிக்காத நிலையில் இக் கருத்து தெரிவிக்கப்பட்டமை ஒப்புதல் வாக்குமூலமாக பார்க்கப்படுகிறது.

2010 – 2020 வரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மட்டக்களப்பு அமைப்பாளராகவும் அமரர் சாம் தம்பிமுத்துவின் புதல்வருமான அருண் தம்பிமுத்து விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண மூத்த தளபதி காந்தன் அவர்களின் நெருங்கிய நண்பன் என குறிப்பிட்டு இக்கருத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2009 விடுதலைப் புலிகள் மௌனிக்கப் பட்ட பின்னர் இப்பயான கருத்துக்களை விடுதலைப்புலிகளின் முன்னாள் மூத்த தளபதிகள் தெரிவிப்பது சர்வதேச ரீதியாக பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என மூத்த ஊடகவியளாளர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.