ஹஜ் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணியத் தேவையில்லை – சவுதி அரசு

0
599

ஹஜ் புனித யாத்திரைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணியத் தேவையில்லை என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

உள்புற வழிபாடுகளின் போது முககவசம் அணிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 8 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு பக்தர்களுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசு அனுமதித்துள்ளது.

இதன்போது தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்றும் மெக்கா மற்றும் மெதினாவில் வழிபாடுகளின் போது மட்டும் முக கவசம் அணிய வேண்டும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது.