கனடாவில் எரிவாயு விலையேற்றத்தினால் நடு வீதியில் நிர்க்கதியான சாரதிகள்

0
155

எரிவாயு விலையேற்றம் காரணமாக நடு வீதியில் சாரதிகள் நிர்க்கதியானதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடா முழுவதிலும் அண்மைய மாதங்களில் எரிவாயு விலை தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எரிவாயு விலைகள் விரைவில் வீழ்ச்சியடையும் சாத்தியங்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.

றொரன்டோ, மொன்டரயல் மற்றும் வான்கூவர் போன்ற பிரதான நகரங்களில் நாள் தோறும் 1 முதல் சதம் எரிவாயு விலை அதிகரிப்பு பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கனேடிய மக்கள் எரிவாயு கொள்வனவு செய்வதற்கான இயலுமையை நாளுக்கு நாள் இழந்து வரும் நிலையை அவதானிக்க முடிகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.