அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears) தனது 3வது திருமணத்தின் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
அவர் தனது நீண்ட கால நண்பரான சாம் அஸ்காரி என்பவரை பிரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears) தெற்கு கலிபோர்னியா விழாவில் திருமணம் செய்து கொண்டார்
இந்நிலையில் அவரது (Britney Spears) மூன்றாவது திருமண நிகழ்வின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
உலகமெங்கும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் பிரபல ‘பாப்’ பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears). 40 வயதான இவர் பாடகி, பாடலாசிரியர், நடன கலைஞர் என பல முகங்களைக் கொண்டவர் ஆவார். பாப் இளவரசி என்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறார்.
இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து உள்ள நிலையில் தனது நண்பரான சாம் அஸ்காாியை (28) 3-வது முறையாக திருமணம் செய்து கொண்டாா். இவா்களது திருமணம் கலிபோா்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெற்ற விழாவில் உலகின் முன்னணி இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் பிரிட்னி ஸ்பியர்சின் (Britney Spears) முன்னாள் கணவா் ஜேசன் அத்துமீறி நுழைந்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருட்களை அடித்து உடைத்த நிலையில் அங்கிருந்த பாதுகாவலா்கள் அவரை தடுத்து நிறுத்தியபோது திருமணத்திற்கு பிரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears) தன்னை அழைத்ததாக அவா் வாக்குவாதம் செய்தாா். இதையடுத்து அவரை பொலிஸார் அவரை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.
அதேவேளை கடந்த 2004-ல் லாஸ் வேகாஸில் தனது குழந்தை பருவ நண்பரான ஜேசன் அலெக்சாண்டரை மணந்தார் (Britney Spears) ஆனால் அவருடனான திருமணம் விரைவில் விவாகரத்தில் முடிந்தது.

அதே ஆண்டில், நடனக் கலைஞர் கெவின் ஃபெடர்லியை மணந்தார். இந்த திருமண வாழ்க்கை 2007-ல் முடிவுக்கு வந்தது. கெவினை 2007-ல் விவாகரத்து செய்திருந்த நிலையில் தற்போது முன்றாவது திருமணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


