தைவான் சுதந்திர நாடாக அறிவித்தால்… அமெரிக்காவிற்கு சீனா எச்சரிகை!

0
730

தன்னை சுதந்திர நாடாக தைவான் அறிவித்தால், சீனா போர் நடவடிக்கையை தொடங்க தயங்காது என சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் Wei Fenghe எச்சரித்துள்ளார்.

தைவான் மற்றும் சீனா இடையே உருவாகி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இன்று சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் Wei Fenghe மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் Lloyd austin ஆகியோர் சிங்கபூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Defense minister stresses China's resolve, warns against US provocations in  'late' first phone talk with Austin - Global Times
Wei Fenghe

இதன்போது தைவான் குறித்து பேசிய சீன பாதுகாப்பு அமைச்சர் Wei Fenghe, தைவான் தன்னை சுதந்திர நாடாக அறிவித்தால், சீனா தனது போர் நடவடிக்கைகளை தொடங்க சிறிதும் தயங்காது என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

சீனாவை அச்சுறுத்தும் வகையில் போர்ப் பயிற்சி செய்த அமெரிக்கா ! | USA troops  threatened China in mid sea | Puthiyathalaimurai - Tamil News | Latest  Tamil News | Tamil News Online | Tamilnadu News

ஒருவேளை யாரேனும் தைவானை சீனாவிடம் இருந்து பிரிக்க நினைத்தால், அது என்ன விலையாக இருந்தாலும், சீன ராணுவம் எத்தகைய தயக்கமும் இன்றி தனது போர் நடவடிக்கையை தொடங்கும் என Wei Fenghe தெரிவித்தாக wu Qian தெரிவித்தார்.

Looking back for the way ahead: An interview with Retired Gen. Lloyd Austin  | Article | The United States Army

அத்துடன், சுதந்திர தைவான் என்ற சதியை முறியடித்து தாய்நாட்டின் ஒருமைப்பாட்டை சீனா நிலைநிறுத்தும் என சீன பாதுகாப்பு அமைச்சர் சபதம் செய்தார். அதோடு தைவானை ”சீனாவின் தைவான்” எனவும் அவர் வலியுறுத்தினார்,

சீனாவை கட்டுப்படுத்த தைவானை பயன்படுத்த நினைப்பது ஓருபோதும் வெற்றிபெறாது எனவும் தெரிவித்தார். இந்நிலையில் அமெரிக்கா பாதுகாப்பு துறை செயலாளர் Lloyd austin, சீனா தைவானின் ஸ்திரத்தன்மையை மேலும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தைவான், ஒரு சுயாட்சி, ஜனநாயக தீவானது, சீனாவின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலின் கீழ் தைவான் வாழ்கிறது. பெய்ஜிங் தைவானை அதன் பிரதேசமாகக் கருதுகிறது மற்றும் தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக ஒரு நாள் கைப்பற்றுவதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.