கொழும்பு மெனிங் சந்தை மூடப்படும் சாத்தியம்…?

0
253

கொழும்பு மெனிங் சந்தை மூடப்படும் சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை ஒருங்கிணைந்த விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

காய்கறிகள் மற்றும் பழங்களின் கையிருப்பு தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாகவே இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விவசாய சமூகத்தின் விவசாய உற்பத்திகளை கொழும்புக்கு கொண்டுவரும் வகையில், லொறிகளை பல்வேறு பகுதிகளிக்கு அனுப்புவதற்கு மெனிங் சந்தை வர்த்தக் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மேல் மாகாணம் மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் காணப்படும் காய்கறி மற்றும் பழங்கள் பற்றாக்குறையினை நிவர்தி செய்ய முடியுமென   அகில இலங்கை ஒருங்கிணைந்த விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் வர்த்தக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.